Tuesday, August 19, 2014

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர் தேசியசாதனை


பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் B.A  முதலாமாண்டு வரலாறு பயின்று வரும் மாணவர் தி.மணிகண்டன் தேசிய இளையோர் பேச்சுப்போட்டியில் தேசிய அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

தமிழகஅரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் (ICTACT) சார்பில் மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு,தென்மண்டல அளவில் ஆறுமாவட்ட அளவில் நடத்தப்பட்டு அதன்பின் மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் மாணவர் தி.மணிகண்டன் அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பெற்றுச் சாதனை புரிந்தார்.

ஆகஸ்ட் 2014 இல் கோயம்புத்தூரில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் “உங்களை நீங்கள் நம்புங்கள்”எனும் தலைப்பில் இளையோர் உரை வழங்கி பங்கேற்ற 521கல்லூரிகளைச் சார்ந்த 12000 மாணவ மாணவியரில் பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் B.A  முதலாமாண்டு வரலாறு பயின்று வரும் மாணவர் தி.மணிகண்டன் தேசிய அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.சாதனை புரிந்த மாணவர் தி.மணிகண்டனுக்கு ICTACT அமைப்பு ரூ.10000 மதிப்புள்ள மின்னனுத்தொழில்நுட்பக்கருவி நினைவுப்பரிசு ஆகியவற்றை வழங்கிப் பாராட்டியுள்ளது.

அடுத்த மாதம் சிங்கப்பூர் செல்வதற்காகத் தேர்வு செய்துள்ளது.

பாராட்டு

தேசிய அளவில் சாதனை புரிந்துள்ள மாணவர் தி.மணிகண்டனுக்கு இளைஞர் நலத்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி அவர்கள் மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆட்சிக்குழுவின் பொருளாளர் அல்ஹாஜ் ஹெ.எம்.சேக் அப்துல் காதர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர், அல்ஹாஜ் கே.ஏ.மீரான் மைதீன்,பொறுப்பு முதல்வர் முனைவர் ஏ.அஷ்ரப் அலி,

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன்,வேதியியல் துறைத்தலைவர் முனைவர் மு.கமாலுதீன், இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ.மு.அயுப்கான் ஆகியோர் பாராட்டினர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home