சதக்கத்துல்லாஹ் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்கவிழா 23.8.14
சதக்கத்துல்லாஹ் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்கவிழா 23.8.14 அன்று காலை 11
மணியளவில் நம் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் முனைவர்
மு.முகமது சாதிக் பேரவைப் பொறுப்பாளர்களுக்குப் பதவியேற்பு
செய்துவைத்தார்.
கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹுர் ரப்பானி அவர்கள்
தலைமையுரை ஆற்றினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம்.கே.எம்.முஹமது நாசர்
முன்னிலை வகித்தார்.மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்,தென்காசி தொகுதி
மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன்,தேர்தல் ஆணையர் பேராசிரியர் கே.ரபி அகமது,அரசுதவி
பெறா வகுப்புக்களின் இயக்குநர் முனைவர் நவராஜ் சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்திப்
பேசினர்.
நம் கல்லூரியில் 1976 ஆம் ஆண்டு புகுமுக வகுப்புப் பயின்ற முன்னாள் மாணவர்
திரு.முத்துக்கருப்பன் அவர்கள்,நாடாளுமன்ற
மாநிலங்களவை உறுப்பினாராய் பொறுப்பேற்றுள்ளார்கள்.அவர்கள் மாணவர்
பேரவையைத் தொடங்கிவைத்து விழாவில்
பேசும்போது
”நெல்லை மாவட்டத்தில் ஏழைஎளிய மக்கள் உயர்கல்வி பெற 43 ஆண்டுகளாக
சதக்கத்துல்லாஹ் கல்லூரி பேருதவி செய்துவந்துள்ளது.வல்லநாடு எனும்
சிறியகிராமத்தில் பிறந்த எனக்கு 1976 ஆம் ஆண்டு புகுமுக வகுப்புப் பயில
நல்வாய்ப்புத் தந்ததன் விளைவாக இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றும்
வாய்ப்புக் கிடைத்துள்ளது.இந்தக் கல்லூரியை நான் என்றும் வாழ்வில்
மறக்கமாட்டேன்.இந்தக் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி மேம்பாட்டுநிதியுதவியில் கட்டிடம் கட்டித் தந்து நானே திறந்து வைக்கவும்
உள்ளேன்.”என்று பேசினார்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சியைத்
தொகுத்து வழங்கினார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home