Tuesday, April 28, 2015

ஜெயமோகன் எழுதிய “அஜிதனும் அரசுப் பள்ளியும்” என்ற கட்டுரை



ஜெயமோகன் எழுதிய “அஜிதனும் அரசுப் பள்ளியும்” என்ற கட்டுரையை நேற்று இந்து தமிழ் வெளியிட்டிருந்தது.
பலரையும் பாதித்த அந்தக் கட்டுரை குறித்த என் பார்வையை இந்து இதழுக்கு அனுப்பிஇருந்தேன். படிக்க இயலாதவன் என்று முத்திரை இடப்பட்ட அஜிதன் இன்று திரைத்துறையில் இயக்குநர் மணிரத்தினத்துடன்..இன்னும் எத்தனை அஜிதன்கள் எங்கெங்கோ..?

இப்படிக்கு இவர்கள் பகுதியில் இன்று வெளியான என் கடிதம்

காத்துக் கிடக்கும் அஜிதன்கள்
 
குழந்தைகளின் குழந்தைத்தனமான குறும்புகளைக் கொன்று, அவர்களின் இயல்பான விளையாட்டைக் கொன்று, அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளைக் கொன்று, அச்சில் வார்த்த பொம்மைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை ஜெயமோகனின்அஜிதனும் அரசுப் பள்ளியும்கட்டுரை முன்வைத்திருக்கிறது.]
 
குழந்தைகளின் உலகத்தை மதிப்பெண் இயந்திரங்கள் அரைத்து நசுக்கித் தரைமட்டமாக்கியிருப்பதை உணர முடிகிறது. எடிசனும் இப்படித்தான் உருவானார்.
 
எட்டரை வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டு மூளைக் கோளாறு உடைய மாணவன் என்று முத்திரை குத்தப்பட்டு, பள்ளியை விட்டு வெளியே அனுப்பப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனுக்கு வீட்டிலேயே மூன்றாண்டுகள் பாடம் சொல்லித்தந்து ஊக்கப்படுத்தியவர் அவர் தாய் நேன்சி மேத்தீவ்ஸ் எலியட்.
 
அவருக்குப் பழங்கதைகளைச் சொல்லியும் கணிதம் கற்றுத்தந்தும் எழுதப் படிக்கச் சொல்லியும் தந்தவர் அவர் தந்தை சாமுவெல் ஓக்டென் எடிசன்.
ஆங்கிலவழிக் கல்வியின் வெம்மை தாங்க முடியாமல் குமுறி ‘‘கணக்கு எனக்குப் பிணக்குஎன்று கவிதை வரைந்த எட்டயபுரத்து சுப்பையாதான் மகாகவி பாரதியாய்ப் பரிணமித்தவர்.
 
வெளியே உள்ள தகவல்களைக் குழந்தைகளின் மூளைக்குள் திணிப்பதையே கல்வி என்று பல ஆண்டுகளாய் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஜெயமோகன் காப்பாற்றிய அஜிதனைப் போல் நாம் காப்பாற்ற வேண்டிய ஆயிரக் கணக்கான அஜிதன்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள்.
 
- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

Labels: , , , ,