Saturday, December 20, 2014

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வாவு அறக்கட்டளைச் சொற்பொழிவு



காயல்பட்டினம் வாவு குடும்பத்தார் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஏற்படுத்தியுள்ள வாவு அறக்கட்டளையின் சார்பில்  20.12.14 காலை 11 மணியளவில் சொற்பொழிவினைத் தமிழ்த்துறை ஒருங்கிணைத்து நடத்தியது.

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி தலைமையுரை ஆற்றினார்.கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்துரை வழங்கினார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் வாவு எஸ்.அப்துர் ரஹ்மான்,அல்ஹாஜ் வாவு எஸ்.ஏ.இஷாக்,பேராசிரியர் கா.முகம்மது பாருக்,பேராசிரியர் அ.ச.ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மாநிலக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் மு.ஹம்ஸா சிறப்புவிருந்தனராய் பங்கேற்று “காவிய நாயகர் குத்பு நாயகம் அப்துல்காதர் ஜெய்லானி(ரஹ்)” எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் அ.மு.அயுப்கான் நன்றிகூறினார்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறை செய்திருந்தது.

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home