Friday, December 19, 2014

தூய சவேரியார் கல்லூரியில் அமரர் A.L. சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு : முனைவர் ச.மகாதேவன்



பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி என்னை உருவாக்கிய கல்லூரி.

என் திறன்களுக்கு வாய்பளித்து வளர்தெடுத்துத் தேசியவிருது பெறவைத்த கல்லூரி.

நேற்று அறக்கட்டளைச் சொற்பொழிவாற்ற அழைப்பு..பழைய நினைவுகளின் படிக்கட்டுகளாய் அந்தக் கம்பீர லெபோக் கலையரங்கம்,கௌசானல் அரங்கம்,பரந்த விளையாட்டு மைதானம், அருமையான நூலகம்,வாளகம் முழுக்கத் தன்நம்பிக்கை நிறைந்த நல்ல வாசகங்கள்..

1992-1998 வரை பயின்ற நாட்கள் நினைவில் ஓடின.திருநெல்வேலி மாநகரின் முன்னாள் மேயரும் சேவியர் கல்லூரியின் முன்னாள் மாணவருமான திரு.ஏ.எல்.சுப்பிரமணியன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவை ஒருமணிநேரம் ஆற்றினேன்.

சவேரியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை கில்பர்ட் கெமில்லஸ் அவர்கள் நான் படிக்கும்போது எங்கள் ஆற்றுப்படுத்துநர்.

முழுமையாய் என் உரையைக் கேட்டார். “கண்டிக்கும் ஆசிரியர் கட்டாயம் கரையேற்றி விடுவார்” கல்லூரிச் சுற்றுச்சுவரில் அன்று எழுதப்பட்ட பொன்மொழி இன்றும் இருந்தது..வித்தியாசமாய் இருந்தது.



Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home