Monday, September 8, 2014

திருநெல்வேலியில் உலக பிசியோதெரபி தினக்கருத்தரங்கம்:சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிப் பேராசிரியர் ச.மகாதேவன் பங்கேற்பு





திருநெல்வேலி மாவட்ட பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில், உலக பிசியோதெரபி தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு சங்கத் தலைவர் டி. விஜயானந்த் ராஜாமணி தலைமை வகித்தார். செயலர் சிவசண்முகம், பொருளாளர் வள்ளி சுப்பிரமணியன் ஆகியோர் சங்க நடவடிக்கைகள் குறித்துப் பேசினர்.

 பிசியோதெரபி தின மலரை ஆர்த்தி ஸ்கேன்ஸ் இயக்குநர் ஜி. அருண்குமார் கோவிந்தராஜன் வெளியிட, மூத்த பிசியோதெரபி மருத்துவர் ஏ.கோபால் பெற்றுக் கொண்டார்.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் சிறப்புவிருந்தினராய் பங்கேற்று வலிநீக்கும் மகத்துவ மருத்துவம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
 
போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஏ.சி. கோபாலசுவாமி, ஆர்த்தி ஸ்கேன்ஸ் இயக்குநர் ஆர்த்தி பிரசன்னா ஆகியோர் நவீன மருத்துவ தொழில்நுட்ப முறைகள் குறித்து பேசினர். 

இதில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிசியோதெரபி மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home