பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் " வண்ணம் "தன்னம்பிக்கைக் குறும்பட வெளியீட்டு விழா
பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்
சீதக்காதி தமிழ்ப்பேரவை மாணவர் பேரவையுடன் இணைந்து “வண்ணம்” எனும் தன்னம்பிக்கை
விழிப்புணர்வுக் குறும்பட வெளியீட்டு விழாவை 28.10.14 அன்று காலை 11மணிக்கு
நடத்தின.
”நல்ல எண்ணங்கள் உயர்வெற்றியைத் தருகின்றன” எனும் பொருளில் இரண்டாமாண்டு
எம்.எஸ்.சி.கணிதம் பயிலும் மாணவர் ஜெய்சன் இயக்கத்தில் இரண்டாமாண்டு
எம்.எஸ்.சி.கணினித்துறை மாணவர் தமிழ்ப்பிரியன்,வரலாற்றுத்துறை மாணவர் முகேஷ் ஆகியோர்
நடித்து மாணவர்களின் முழுமுயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள “வண்ணம்” எனும் குறும்பட
வெளியீட்டு விழா கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி தலைமையில்
நடைபெற்றது.
தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் வரவேற்றுப்
பேசினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக்,ஆட்சிக்குழு உறுப்பினர்
அல்ஹாஜ் கே.ஏ.மீரான்முகைதீன்,பொறியாளர் ஆதம்,மாணவர் பேரவைத் தலைவர் முகமது அப்சர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“வண்ணம்” எனும் குறும்படத்தை தாளாளர் அல்ஹாஜ்
த.இ.செ.பத்ஹூர் ரப்பானி வெளியிட அதன் முதல்பிரதியை ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ்
எம்.கே.எம்.முகமது நாசர் பெற்றுகொண்டார்.திரைப்படம் தயாரித்த மாணவர்களை
பேராசிரியர்கள்,மாணவமாணவியர் பாராட்டினர்.
படத்தில்:
பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்
சீதக்காதி தமிழ்ப்பேரவை மாணவர் பேரவையுடன் இணைந்து “வண்ணம்” எனும் தன்னம்பிக்கை விழிப்புணர்வுக்
குறும்பட வெளியீட்டு விழாவில் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி
வெளியிட அதன் முதல்பிரதியை ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது
நாசர் பெற்றுக்கொள்கிறார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home