Tuesday, September 23, 2014

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழாவில் ஜம்மு காஷ்மீர் வெள்ளநிவாரணத்திற்கு மாணவர்பேரவை ரூ ஒரு லட்சம் நிதியதவி







பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப்பேரவைத்          தொடக்கவிழா 23.9.14 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுத் தலைமையுரை ஆற்றினார்.விழாவில் சிறப்புவிருந்தினராக சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் புசி.கணேசன் கலந்துகொண்டு “உணர்வும் கனவும்”என்ற பொருளில் சிறப்புரையாற்றினார்.
ஜம்மு காஷ்மீர் வெள்ளநிவாரணத்திற்கு மாணவர்பேரவை ரூ ஒரு லட்சம் நிதியதவி
ஜம்மு காஷ்மீர் வெள்ளநிவாரணத்திற்கு மாணவர்பேரவை சார்பில் ரூ ஒரு லட்சம் நிதியதவியைக் கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் அவர்களிடம் மாணவர் பேரவைத் தலைவர் முகமது அப்சர்,பேரவைச் செயலாளர் சகினா பானு,பேரவைத் துணைத்தலைவர் ரிஸ்வானா,இணைச் செயலாளர் அமீர் ரஷீத் கான் ஆகியோர் வழங்கினர்.இந்நிகழ்வில் பேரவைத் தேர்தல் ஆணையர் பேராசிரியர் கே.ரபி அகமது,தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன்,பேராசிரியர் புசி.கணேசன்,முனைவர் அ .சே.சேக் சிந்தா,பேராசிரியர்  சாதிக்,பேராசிரியர் முகமது ஹனிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவர் பேரவை நிதியுதவியை ஒருங்கிணைத்து உதவிய மாணவ மாணவியருக்கு தமிழ்த்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் அ.சே. சேக் சிந்தா நன்றி கூறினார்.விழாவுக்கான ஏற்பாடுகளைக் கல்லூரித் தமிழ்த் துறை செய்திருந்தது.
செய்தி: முனைவர் ச.மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home